பொருளாதார நெருக்கடி உள்நாட்டு போர் போன்ற காரணங்களினால் ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து பலர் சட்டத்திற்கு புறம்பாக ஐரோப்பிய நாடுகளில் குடியேறி வருகின்றனர். இந்த சட்ட விரோத குடியேற்றத்திற்கு முக்கிய புள்ளியாக இருப்பது துனீசியா. இவ்வாறு சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் குடியேற்றங்களை தடுக்க துனீசியா அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்தும் குடி புகுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது.

இந்நிலையில் ஸ்பெக்ஸ் மாகாண கடற்கரையில் பலர் தங்கி உள்ளதாக தகவல் கிடைக்கவே அங்கு சென்ற துனீசியா கடற்படை அதிகாரிகள் 108 பேரை மீட்டுள்ளனர். இதுகுறித்து அந்நாட்டு அதிபர் கூறுகையில், “எங்களிடம் தஞ்சம் புகுவருக்கு துனீசியா புகளிடம் அளிக்கும். ஆனால் சட்டத்திற்கு புறம்பாக எங்கள் நாட்டில் குடியேறினாலோ அல்லது எங்கள் நாட்டை போக்குவரத்து பாதையாக பயன்படுத்தினாலோ அது அனுமதிக்கப்படாது” என கூறியுள்ளார்.