இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு தேவாலயத்தில் திருமணம் நடத்தி வைப்பது, செய்தி வாசிப்பது என பல இடங்களில் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கி விட்டன. இந்த தொழில்நுட்பத்தை சர்வதேச பாதுகாப்புக்கும் பொருளாதாரத்துக்கும் எப்படி பயன்படுத்தலாம் என உலக நாடுகள் யோசித்து வருகிறது.

இந்நிலையில் AI தொடர்புடைய ஐக்கிய நாடுகள் சபையின் முதல் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் ஜேம்ஸ் தலைமை தாங்குகின்ற இந்தக் கூட்டத்தில் AI தொழிநுட்பத்தின் நன்மை தீமைகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.