கூகுள் பிளே ஸ்டோரில் கூகுள் ஃபைண்டு மை டிவைஸ் Google Find My Device என்ற புதிய செயலியை பதிவிறக்கம் செய்து உங்களுடைய மின்னஞ்சல் தகவல்களை கொடுத்து உங்களது செல்போன் எங்கே உள்ளது என்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

இல்லையென்றால் மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை சார்பாக செல்போன் திருட்டை கண்டுபிடிக்க https://www.ceir.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று திருடு போன செல்போன் குறித்த தகவல் நேரம், தேதி, திருடு போன இடம், iMEI எண், காவல்துறை புகார் என்னை கொடுத்தால் உங்களுடைய செல்போன் எளிதில் கண்டுபிடித்து தரப்படும். மாறாக உங்களுடைய செல்போன் திருடு போனவுடன் ஆப் செய்யப்பட்டால் மீண்டும் அதனை ஆன் செய்து வேறு சிம் கார்டு போட்டு பயன்படுத்தும் வரை உங்களால் கண்டுபிடிக்க முடியாது.