தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. குடும்பத் தலைவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், உயர்கல்வி படிக்கும் பெண் பிள்ளைகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது இதில் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. விரைவில் குடும்ப தளைவிகளுக்கு ரூ.1000 திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. மகளிர் இலவச பேருந்து பயணம் என்ற திட்டம் நிறைவேற்றப்பட்டு பெண்களுடைய நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பள்ளி மாணவிகள் முதல் வயதான மூதாட்டிகள் வரை அனைவருமே இந்த திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலமாக சுமார் ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க முடிந்ததாகவும் பெண்கள் தெரிவிக்கின்றனர். இந்த திட்டங்களை எல்லாம் உள்ளடக்கிய இந்த அரசு திராவிட மாடல் அரசு என்று ஸ்டாலின் பெருமை பேசினார். இந்த நிலையில் இந்த திராவிட மாடலை மற்ற மாநிலங்களும் பின்பற்ற தொடங்கி இருப்பது தான் இந்த திட்டங்களில் முக்கியத்துவம் தெரிய வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

அதாவது திராவிட ஃபார்முலாவை மற்றும் மாநிலங்களும் பின்பற்றுவது தான் இப்போதைய ஹாட் டாபிக். மகளிர்கான இலவச பேருந்து பயணத்திட்டம் ஏற்கனவே புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கர்நாடகாவிலும் மகளிர்கான இலவச பேருந்து பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் அனைத்து பெண்களும் அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.