கடந்த திமுக ஆட்சியின் மின் கட்டணக் கணக்கீட்டு முறையையும், தற்போது அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சியின் மின் கட்டணக் கணக்கீட்டு முறையையும் ஒப்பீடு செய்து, 200 யூனிட்டுகளுக்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் போது கட்டணம் எவ்வாறு உயர்கிறது என்பது குறித்த விரிவான விளக்க வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், 200 யூனிட்டைக் கடக்கும் போது பழைய ஆட்சியை விடக் கூடுதல் கட்டணம் வருவதாகச் சிலர் முன்வைத்த புகாருக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.

ஒரு பயனர் 206 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் சூழலை எடுத்துக்காட்டாகக் கொண்டு வாலிபர் வெளியிட்ட கணக்கீடு விவரம் இதோ,

1. கடந்த திமுக ஆட்சியில் (100 யூனிட் இலவசம்):

மொத்த பயன்பாடு: 206 யூனிட்
இலவச மின்சாரம்: 100 யூனிட்
கட்டணம் செலுத்த வேண்டிய யூனிட்: 106 யூனிட்

கட்டண விவரம்:

101 முதல் 200 யூனிட் வரை (100 யூனிட்களுக்கு) 1 யூனிட்டுக்கு ₹2.35 வீதம் = ₹235
201 முதல் 300 யூனிட் வரை (மீதமுள்ள 6 யூனிட்களுக்கு) 1 யூனிட்டுக்கு ₹4.70 வீதம் = ₹28.20
மொத்தக் கட்டணம்: ₹235 + ₹28.20 = ₹263.20

258 யூனிட் பயன்பாட்டிற்கான ஒப்பீடு (உண்மை நிலை):
258 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் ஒருவருக்கு இரு ஆட்சிகளின்கீழ் கணக்கிடப்படும் தொகையின் ஒப்பீடு:

1. கடந்த திமுக ஆட்சியில்:
மொத்த பயன்பாடு: 258 யூனிட்
இலவச மின்சாரம்: 100 யூனிட்
கட்டணம் செலுத்த வேண்டிய யூனிட்: 158 யூனிட்

கட்டண விவரம்:
101 – 200 யூனிட் வரை (100 யூனிட் × ₹2.35) = ₹235
201 – 300 யூனிட் வரை (58 யூனிட் × ₹4.70) = ₹272.60
மொத்தத் தொகை: ₹235 + ₹272.60 = ₹507.60

2. தற்போதைய தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் (200 யூனிட் இலவசம்):
மொத்த பயன்பாடு: 258 யூனிட்
இலவச மின்சாரம்: 200 யூனிட்
கட்டணம் செலுத்த வேண்டிய யூனிட்: 58 யூனிட்

கட்டண விவரம்:

200 யூனிட் கழிந்தது போக மீதமுள்ள 58 யூனிட்களுக்கும் 201-300 ஸ்லாப் கட்டணமான ₹4.70 வீதம் கணக்கிடப்படுகிறது (58 × ₹4.70) = ₹272.60 (சுமாராக ₹273)
மொத்தக் கட்டணம்: ₹273

பழைய ஆட்சியில் 258 யூனிட் பயன்படுத்திய போது கட்டணம் ₹507.60 ஆக இருந்தது. ஆனால், புதிய ஆட்சியில் 200 யூனிட் இலவசம் வழங்கப்படுவதால், கட்டணம் செலுத்த வேண்டிய தொகை ₹273 ஆகக் குறைந்துள்ளது. இதன் மூலம், ₹507.60 – ₹273 = ₹234.60 (சுமார் ₹235) வரை நுகர்வோருக்குச் சேமிப்பு கிடைக்கிறது.

200 யூனிட்டைக் கடக்கும் போது கட்டண ஸ்லாப் மாறுவதால் மட்டுமே கணக்கீட்டில் மாற்றம் தெரியுமே தவிர, ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தின் மூலம் நுகர்வோருக்குக் கட்டணம் கணிசமாகக் குறைந்துள்ளதை இந்த எளிய கணக்கீடு தெளிவாக உணர்த்துகிறது என அந்த வாலிபர் விளக்கியுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Syed Imran (@syedimran.ef)