தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், வரும் பிப்ரவரி 20-ஆம் தேதி முதல் மார்ச் 2-ஆம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதற்கான விண்ணப்பங்களை பிப்ரவரி 20 முதல் திமுக தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.‌ கட்டணத்தைப் பொறுத்தவரை, பொதுத் தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் ரூ.25,000-மும், மகளிர் மற்றும் தனித் தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் ரூ.15,000-மும் செலுத்த வேண்டும்.

ஒருவேளை கூட்டணி கட்சிகளுக்கு குறிப்பிட்ட தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டால், அந்தத் தொகுதிகளுக்காக விண்ணப்பித்தவர்களின் கட்டணம் திருப்பித் தரப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.