திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அ. ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் ஜாபர் சாதிக்கை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. அ.ஜாபர் சாதிக் மீதான ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார் ஜாபர் சாதிக். டெல்லியில் போதை பொருள் பிடிபட்ட விவகாரத்தில் ஜாபர் சாதிக் தேடப்பட்டு வரும் நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அ. ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நீக்கம்.!!
Related Posts
வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த திட்டமுமில்லை…. நாராயண திருப்பதி…!!!
தமிழக மக்களைக் குடிக்கு அடிமையாக்கி, டாஸ்மாக் வருமானத்தைப் பெருக்கி திமுக ஆட்சியை நடத்திவருவதாக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “அரசின் வருவாயைப் பெருக்கப் புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு கொண்டுவரவில்லை.…
Read moreBREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read more