மதிமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து விலகி ‘திராவிட வெற்றிக் கழகம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ள மல்லை சத்யா, வரும் தேர்தலில் திமுக கூட்டணிக்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாகத் தாம் தேர்தல் பரப்புரை செய்யப் போவதாகவும், இதில் தமக்கு எந்தவித மனக்கசப்போ அல்லது நெருடலோ இல்லை என்றும் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
