திமுக கூட்டணியில் புதிய கட்சியின் சேர்க்கை குறித்த தகவல்கள் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த கூட்டணியில் பாமக தலைவர் ராமதாஸ் கட்சி இணையும் வாய்ப்பு உள்ளது. இதைத் தொடர்ந்து, ராமதாஸ் – திருமாவுக்கும் இடையே ரகசிய சந்திப்பு நடைபெற்றதாகவும், அதனடிப்படையில் திமுகவுடன் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வட மாவட்டத்தை சேர்ந்த ஒரு முக்கிய அமைச்சரும், இந்த பேச்சுவார்த்தைகளில் நேரடியாக ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
கூட்டணியில் இணையும் முன், சீட் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராமதாஸ் தவிர்த்துவருகிறார். இது திமுகவுக்குள் உள்ள கூட்டணிக் கணக்குகளில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திமுக கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் இந்த இணைப்பு முக்கியமான முடிவாக அமையும் என்றும், இது தமிழக அரசியலில் ஒரு புதிய கூட்டணித் தூணாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
