தமிழகத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வழங்கப்பட இருக்கிறது. இதற்காக டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டு தகுதி உள்ளவர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த மகளிர் உரிமைக்காக திட்டம் குறித்து அதிமுகவினர் பலரும் விமர்சனங்களை தெரிவித்து வரும் நிலையில் நேற்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக நூற்றாண்டு பொன்விழா மாநாடு மதுரை அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.

அதன்பிறகு செய்தியாளர்கள் சந்தித்து பேசிய அவர், திமுக உறுப்பினர் அட்டை வைத்திருப்பவர்களுக்கு தான் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது. தன்னார்வலர்கள் மூலமாக படிவம் கொடுப்பதாக சொல்லிவிட்டு திமுக ஒன்றிய செயலாளர்கள், மாநகர செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மூலமாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தகுதி இருந்தும் உரிமைத் தொகை பெறாதவர்களின் கோபம் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று கூறியுள்ளார்.