தமிழகத்தில் இன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வுகள், நிர்வாகக் குளறுபடிகளால் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரம் குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஒரு மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் ஒரு தேர்வைக்கூடச் சரியாக நடத்த முடியாத நிலையில் இருப்பது மிகப்பெரிய அவமானம் என்று சாடியுள்ளார்.

“டிஎன்பிஎஸ்சி நிர்வாகமும், திமுக அரசும் நிர்வாக ரீதியாக முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது” என்று அவர் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார். ​தேர்வு மையங்களுக்குச் சென்ற மாணவர்களுக்குத் தங்களது பதிவு எண்கள் இல்லாதது மற்றும் ஹால் டிக்கெட் குளறுபடிகளால் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைச் சுட்டிக்காட்டிய எல்.முருகன், மாணவர்களின் உழைப்பையும் நேரத்தையும் இந்த அரசு வீணடித்துவிட்டதாகக் குற்றம்சாட்டினார்.