தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி, தற்போதைய தவெக அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளார். மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், திறமையான அதிகாரிகளை நியமித்திருப்பதாகக் கூறும் முதலமைச்சர் விஜய், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்குக் கூடத் தெரியாமல், வேறு இடத்தில் கொண்டு போய் உடல்களை அடக்கம் செய்யும் அளவிற்குத் துணிச்சல் எங்கிருந்து வந்தது என்றும் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் தற்போது நடந்து வருவது ஈவு இரக்கமற்ற ஒரு காட்டாட்சி என்றும், இந்த மக்கள் விரோத மற்றும் இரக்கமற்ற காட்டாட்சி மிக விரைவில் வீழ்வது உறுதி என்றும் தனது கண்டன அறிக்கையில் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
