நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய்யின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிரடியாகத் தேர்தல் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

முதலமைச்சர் விஜய்க்கு எதிராக அடுக்கடுக்கான புகார்களைச் சுட்டிக்காட்டி இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ​தனது மனுவில் பல முக்கியக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள இனிகோ இருதயராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் விஜய் 18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளைப் பயன்படுத்திப் விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனக்கு இருக்கும் வருமான வரி வழக்கு நிலுவையில் உள்ள விபரங்களை வேட்புமனுத் தாக்கலின் போது விஜய் திட்டமிட்டே மறைத்துள்ளார் என்றும், தற்போது அவர் திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளதால், அந்தத் தொகுதியில் தன்னை வெற்றியாளராக அறிவிக்க வேண்டும் என்றும் தேர்தல் வழக்கில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.