கொள்கை மற்றும் லட்சியம் இன்றி கட்டுப்பாடில்லாமல் வெற்றுக் கூச்சல் போடும் கூட்டத்தால் தமிழகத்திற்கு எவ்வித பயனும் இல்லை” என்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். விருதுநகரில் நேற்று  நடைபெற்ற திமுக இளைஞரணி தென்மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசும்போது,

விருதுநகரில் கட்சி நிர்வாகிகளிடையே பேசிய உதயநிதி ஸ்டாலின், அண்மையில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டுச் சாடினார். “தமிழகத்தில் லட்சியம் என்றால் என்னவென்றே தெரியாமல், கட்டுப்பாடு இன்றி வெறும் கூச்சல் போடும் ஒரு கூட்டம் சுற்றி வருகிறது. அவர்களால் இந்த மாநிலத்திற்கு ஒரு சிறு நன்மையும் விளையப் போவதில்லை; ஏன், அவர்களுக்கே அவர்களால் பலனில்லை” என்று அவர் சாடினார்.

மேலும் திமுகவுக்கு வயது 76 என்றும் இன்னும் இளமையுடன் வீரம் குறையாமல் இருக்கும் என்றும் துணை முதல்வர் உதயநிதி பேசிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாஜகவையும் அவர் கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கதாகும். திமுகவை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் விஜயை குறிப்பிட்டு  இவ்வாறு மறைமுகமாக சாடியதாக கூறப்படுகிறது.