முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணையப் போவதாக வெளியாகி வரும் அரசியல் தகவல்களுக்கு அவர் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ மறுப்போ அல்லது விளக்கமோ அளிக்காமல் மௌனம் காப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.”

வழக்கமாகத் தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கும் செய்திகளுக்கும் உடனடியாகப் பதிலடி கொடுக்கும் செந்தில் பாலாஜி, இந்த விவகாரத்தில் அமைதி காப்பது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

கொங்கு மண்டலமான கோவையில், அதிமுகவின் முக்கியப் புள்ளியான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு மாற்றாகப் பலமான ஒரு தலைவரை உருவாக்கவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி‌ செந்தில் பாலாஜியைத் தனது கட்சிக்கு இழுக்கத் தூது அனுப்பி வருவதாகத் தகவல்கள் கசிந்து வருகின்றன.

இந்த உள்கட்சி நகர்வுகள் மற்றும் செந்தில் பாலாஜியின் மௌனம் கொங்கு மண்டல அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.