திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான மிசா.பி.மதிவாணன் வயது மூப்பு காரணமாக காலமானார். தலைமைச் செயற்குழு உறுப்பினர், விவசாயத் தொழிலாளர் அணியின் மாநிலச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். கருணாநிதியை தலைவராக முன்மொழிந்தவர்களில் மிசா.பி. மதிவாணனும் ஒருவர். அவரது மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.