தமிழ்நாடு மாநில உயர்கல்வி சபையானது தற்போது புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு கல்லூரிகளை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான “பகுதியளவு நிதி உதவி” திட்டத்தின் கீழ், மே 22 ஆம் தேதிக்கு முன்னதாகப் பயிலரங்கங்களை நடத்துமாறு பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு இந்தச் சபை அழைப்பு விடுத்துள்ளது. இந்த இரண்டு நாட்கள் அளவிலான சர்வதேச மாநாட்டினை நடத்துவதற்கு கல்லூரிகளுக்கு 40,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.