இந்தியாவில் இனி வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக புதிய செய்தி வெளியாகி உள்ளது. இந்த புதிய நடைமுறையின் படி ஊழியர்கள் ஒரு நாளைக்கு பத்து முதல் 12 மணி நேரம் என நான்கு நாட்களுக்கு வேலை செய்ய வேண்டும். அப்படி செய்தால் மீதமுள்ள மூன்று நாட்கள் அவர்களுக்கு விடுமுறை கிடைக்கும். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இது தொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.