இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக மக்களின் நலனுக்காக பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி மக்கள் தங்களுடைய ஓய்வு காலத்தில் பண தேவை ஏற்படாமல் இருக்க சிறந்த ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அதில் அடல் ஓய்வூதிய திட்டம் மிக சிறந்ததாக இருக்கும். இந்த திட்டத்தில் 60 வயது முதல் இறப்பு வரை முதலீட்டின் அடிப்படையில் ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை ஓய்வூதியம் பெற முடியும்.

இந்த திட்டத்தில் தினம்தோறும் 7 ரூபாய் சேமித்து ஓய்வுக்கு பிறகு மாதம் ஆயிரம் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை ஓய்வூதியம் பெறலாம். இதில் 18 முதல் 40 வயதிற்கு உட்பட்ட எந்த இந்திய குடிமக்களும் இணைய முடியும். மேலும் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஒரு திருத்தத்தில் வருமான வரி செலுத்தும் தனிநபர்கள் அடல் ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை பெற முடியாது. இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு இறப்புக்கு பிறகு அவர்களின் மனைவிக்கு ஓய்வூதியம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.