சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம் L1 புள்ளியை சென்றடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சூரியனை ஆய்வு செய்ய செப்டம்பர் 2-இல் ஆதித்யா விண்கலத்தை இந்தியா அனுப்பியது. ஆதித்யா விண்கலம் 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள L1 புள்ளியை தற்போது சென்றடைந்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு சுற்றுவட்டப்பாதையில் சுற்றியபடி சூரியன் குறித்து ஆதித்யா ஆய்வு மேற்கொள்ளும். ‘புதிய வரலாற்றை இந்தியா எட்டியுள்ளது’ என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆதித்யா L1 விண்கலம் என்னவெல்லாம் செய்யும்? என்று தெரிந்து கொள்ளலாம்.

*சூரியனின் வெளிப்புற வெப்பச் சூழல், கதிர்வீச்சை ஆராய்வதற்கு உதவும்.

* அறிவியல் ஆராய்சிக்காக சூரியனின் பல்வேறு கோணயங்களை புகைப்படம் எடுத்து அனுப்பும்.

*விண்வெளியில் உலவும் செயற்கைக்கோள்களை பலவகையான பாதிப்பில் இருந்து காக்க உதவும்.

*சூரியனின் வெளிப்புறத்தை ஆராய 7 வகையான கருவிகள் ஆதித்யா 11 விண்கலத்தில் உள்ளன.

*சூரியனில் ஏற்படும் நிகழ்வுகளால் அதன் வெளிப்புறத்தில் ஏற்படும் மாற்றங்களை ஆராயும்.