நாட்டின் முன்னணி ஒளிபரப்பு நிறுவனங்களான Zee entertainment, Sony pictures, Viacom 18 ஆகிய நிறுவனங்கள் சேனல்களில் பேக்கேஜ் விலையை உயர்த்தியுள்ளன. Viacom 18 நிறுவனம் 20 முதல் 25 சதவீதம், Zee ஒன்பது முதல் 10 சதவீதம், Sony 10 முதல் 11 சதவீதம் வரை விலையை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து டிஸ்னி ஹாட் ஸ்டாரும் தனது புதிய விலையை அறிவிக்க உள்ளது. இந்த விலை உயர்வு வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால் கேபிள் டிவி மற்றும் டிடிஎச் கட்டணங்களும் உயர உள்ளது.