இந்தியாவில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் நோக்கத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் இந்த திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 250 ரூபாய் செலுத்தி 56 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம். இந்த தொகையை குழந்தைகளுக்கு 18 வயது ஆகும்போது கல்வி மற்றும் திருமண செலவுக்காக எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதேசமயம் தற்போது இந்த திட்டத்தில் 8.2% வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் வட்டி விகித அடிப்படையில் நீங்கள் மாதம் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கலாம். அதனைப் போலவே 15 ஆண்டுகால முடிவில் உங்களுடைய முதலீட்டில் நீங்கள் 18 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். மொத்தமாக வட்டியுடன் சேர்த்து உங்களுக்கு 55.84 லட்சம் கிடைக்கும்.