
சமூக வலைத்தளங்களில் இன்று தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதில் பல வீடியோக்கள் மக்களை வியக்க வைக்கும் வகையில் இருக்கும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் புதுச்சேரியில் டீக்கடைக்காரரிடம் தினமும் ஒரு காகம் வருகிறது.
அந்த காக்கை வந்ததும் டீக்கடைக்காரர் காக்கைக்கு ஒரு கப்பில் பால் ஏடை எடுத்துக் கொடுத்தவுடன் அந்த காக்கை அதைப் பெற்றுக் கொண்டு சென்று சாப்பிடுகிறது. தினமும் இந்த காக்கை அந்த டீக்கடைக்கு வந்து பால் எடை பெற்று செல்வதை அப்பகுதி மக்கள் வியப்போடு பார்க்கின்றனர். தற்போதைய இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.
#புதுச்சேரியில் டீக்கடைக்காரரிடம் தினமும் பால் ஏடை கேட்டு பெற்று செல்லும் #காக்கை#crow pic.twitter.com/lLKBoylEXa
— RAMJI (@RAMJIupdates) May 18, 2023