ஹரியானா மாநிலத்தில் புதிய மதுபான கொள்கையின்படி, இனிமேல் கார்ப்பரேட் அலுவலகங்களில் மது அருந்த அம்மாநில அரசு, அனுமதி வழங்கியுள்ளது. ஹரியானாவின் குருகிராம் பகுதியில் உள்ள கார்ப்பரேட் அலுவலகங்களில், ஊழியர்களுக்கு மதுபானங்கள் வழங்க அனுமதி அளித்து மாநில கலால் கொள்கையில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த நடைமுறையானது நேர்மறையான வேலை சூழலை உருவாக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த நடைமுறை ஜூன் 12ல் அமலுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்  இதற்கு அலுவலகத்தில் குறைந்தது 5000 ஊழியர்கள் பணிபுரிய வேண்டும் என ஹரியானா அரசு நிபந்தனையும் வைத்துள்ளது.