ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ஒரு எதிர்பாராத மற்றும் நகைச்சுவையான சம்பவம் அரங்கேறியது. அவர் கூட்டணி பற்றிப் பேசிக்கொண்டிருந்த தருணத்தில், அங்கிருந்த தொண்டர் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு ஒரு கோரிக்கையை வைத்தார்.
அவர் ஓபிஎஸ்ஸைப் பார்த்து, “ஐயா, சீக்கிரம் ஒரு நல்ல முடிவைச் சொல்லுங்கள்… தினம் தினம் செத்து பிழைக்கிறோம்!” என்று அலறலாகக் கத்தியதும், அங்கே கூடியிருந்த செய்தியாளர்கள் மற்றும் தொண்டர்களிடையே பலத்த சிரிப்பலை எழுந்தது. அந்தத் தொண்டரின் ஆதங்கம் கலந்த வேண்டுகோளைக் கேட்ட ஓபிஎஸ் அவர்களும் புன்னகையோடு அந்தச் சூழலைக் கையாண்டார்.
