
இந்தியாவில் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிவரங்களின்படி தினசரி 86 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். அப்படி பார்த்தால் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை 4 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். நாட்டில் கடந்த 2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரை மொத்தம் 1.89 லட்சம் பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், இதில் 1.91 லட்சம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதோடு 1.79 லட்சம் வழக்குகளில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் தெரிந்த நபர்களாக இருக்கிறார்கள். நாட்டில் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண்களே அதிகளவில் பாதிக்கப்படும் இந்த புள்ளி விவரங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த புள்ளி விவரங்கள் கூடுதல் அதிர்ச்சியை தருவதாக இருக்கிறது.