ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணி முகாமில் இளம் வீரர் ஒருவருக்கு ஏற்பட்ட விபரீத காயம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பயிற்சியின் போது பந்து அந்த வீரரின் முகத்தில் மிக பலமாகத் தாக்கியதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. நிலைகுலைந்து சரிந்த அந்த வீரருக்கு மைதானத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் காயத்தின் வீரியம் அதிகமாக இருந்ததால், உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவர் ஸ்ட்ரெச்சரில் படுக்க வைக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவம் டெல்லி அணியின் மற்ற வீரர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது அந்த வீரர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ள நிலையில், காயம் எந்தளவுக்குத் தீவிரமானது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியப் போட்டிகள் நெருங்கி வரும் வேளையில், இளம் வீரர் ஒருவருக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டது டெல்லி கேபிடல்ஸ் ரசிகர்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீரர் விரைவில் குணமடைய வேண்டி நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
A young Delhi Capitals player was hit hard on the face by the ball during practice, which caused a serious injury. An ambulance was called to the ground, and he was placed on a stretcher and taken to the hospital.😢
I hope he’s okay and hasn’t suffered any serious injury.🙏 pic.twitter.com/JX8Xjl6YOW
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) April 24, 2026
“>
