தமிழக அரசியலில் மற்றுமொரு அதிரடித் திருப்பமாக, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனிக்கு எதிராகத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரி முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட நவாஸ் கனியின் வெற்றியை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

தற்போது அந்த வழக்கைத் திரும்பப் பெற அனுமதி கோரி அவர் மனு அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ஓபிஎஸ்-ஸின் இந்தத் திடீர் மனமாற்றத்திற்குப் பின்னால் இருக்கும் அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்று பலரும் உற்று நோக்கி வருகின்றனர்.