உத்திரபிரதேசம் மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் ராஜேந்திரன்(62)-சரோஜ் தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகன் இருந்துள்ளார். இதில் ராஜேந்திரன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். இவர்களுடன் ராஜேந்திர சிங்கின் சகோதரியும் அவரது மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி இரவு ராஜேந்திரனுக்கும் அவரது சகோதரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ராஜேந்திரனுடைய சகோதரியின் மகன் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து ராஜேந்திரன் சிங் அவரது மனைவி மற்றும் மகனை சுட்டார்.
இதில் மூவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். இவர்களை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராஜேந்திர சிங் மற்றும் அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். ராஜேந்திர சிங்கின் மகன் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த தகவலின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சிறுவனை வலைவீசி தேடி வருகின்றனர்.
