தமிழக அரசியல் களத்தையே அதிரவைக்கும் மாஸ் ட்விஸ்ட்டாக, சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் நீடித்து வந்த உட்கட்சிப் பூசலும் பிளவும் இன்றுடன் (மே 27) ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்-க்கு எதிராகக் காய் நகர்த்தி வந்த வேலுமணி தரப்பு, தற்போது மீண்டும் அவரோடு கைகோர்த்து ஒன்றிணைந்துவிட்டது தமிழக அரசியலில் சண்டமாருதத்தைக் கிளப்பியுள்ளது. இந்த அதிரடி இணைப்பை 100% உறுதிப்படுத்தும் விதமாக, அ.தி.மு.க ஐடி விங் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு அதிரடியான பதிவை வெளியிட்டு சஸ்பென்ஸை உடைத்துள்ளது.

அதில், “கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது; இனி நமக்குள் பிரிவில்லை, இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை; கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறக்கும்!” என்று பக்கா த்ரில்லிங் கவித்துவத்துடன் பதிவிட்டுள்ளனர்.
வேலுமணி தரப்பின் இந்த திடீர் யு-டர்ன் மற்றும் அ.தி.மு.க-வின் இந்த இமாலய இணைப்பு, மாற்று முகாம்களைக் கலங்கடித்துள்ளதோடு, கோட்டையைக் கைப்பற்றும் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளையும் அனல்பறக்க வைத்துள்ளது!
” எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் “
– அம்மாகோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது!
இனி நமக்குள் பிரிவில்லை…
இந்த எஃகு கோட்டையை… pic.twitter.com/irmekC9pu6— AIADMK IT WING – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKITWINGOFL) May 27, 2026
“>
