மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு அடையாளம் தெரியாத இளைஞன், காலு சிங் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்து, அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவன் விகாஸை கூரிய ஆயுதத்தால் தாக்கி, அவனது தலையை துண்டித்து உடலை மூன்று துண்டுகளாக வெட்டினான். இந்த கொடூர சம்பவத்தால் கிராமமே அதிர்ச்சியில் உறைந்தது.
சிறுவனின் தாய் கதறி அழுது மயங்கி விழ, அக்கம்பக்கத்தினர் கூடி, பைக்கில் தப்பியோட முயன்ற அந்த இளைஞனை பிடித்து கடுமையாக தாக்கினர். பின்னர் வந்த காவல்துறையினர் அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவன் உயிரிழந்தான்.இறந்த அந்த இளைஞனின் பெயர் மகேஷ் மேடா என அடையாளம் காணப்பட்டது.
அவன் மனநலம் பாதிக்கப்பட்டவனாக இருக்கலாம் என்றும், பல நாட்களாக வீட்டை விட்டு வெளியே இருந்ததாகவும் கூறப்படுகிறது. குக்ஷி காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து, மகேஷின் மரணம் குறித்து பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
