மத்திய பிரதேசம் மாநிலம் பரத்பூர் மாவட்டம் குஞ்சோரா கிராமத்தில் சனிக்கிழமை மாலை திடிரென இடி மின்னலுடன் கூடிய சூறைக்காற்று வீசியது. அப்போது மரம் முறிந்து விழுந்து பிருந்தாவன் லோகி(50), பால்ராஜ் மோதி(35) இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது சூறைக்காற்றில் முறிந்து விழுந்த மரம் பழைய மரம் எனவும், அந்த மரத்தின் கீழ் ஒரு குழு பூஜை செய்து கொண்டிருந்தபோது காற்று வீசியதால் மரம் முறிந்து விழுந்து இருவர் உயிரிழந்தது தெரியவந்தது.