ஹரித்வாரில் நேற்று இரவு துளசி சௌக் பகுதியில் தனது குடும்பத்தினருடன் இருந்த 2 வயது பெண் குழந்தை திடீரென கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. தகவல் அறிந்தவுடன் மின்னல் வேகத்தில் செயல்பட்ட ஹரித்வார் போலீசார், தனிப்படைகள் அமைத்து நகரம் முழுவதும் அதிரடி வேட்டையில் இறங்கினர். போலீசாரின் இந்த அதிரடி நெருக்கடியால் பயந்துபோன கடத்தல்காரன், குழந்தையை ரிஷிகுல் சௌக் பேருந்து நிலையத்தில் தவிக்கவிட்டு தப்பியோடிவிட்டான்.
🚨 Haridwar: 2-year-old girl kidnapped last night near Tulsi Chowk, rescued in just 4 hours! Found abandoned at Rishikul Chowk bus stop. Swift police op with joint teams; hunt for kidnapper on. 👏
pic.twitter.com/6qHXPhzQC5— Ghar Ke Kalesh (@gharkekalesh) February 21, 2026
கடத்தப்பட்ட நான்கே மணி நேரத்தில் குழந்தையை பத்திரமாக மீட்ட போலீசாரின் இந்தச் செயல் பொதுமக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள அந்த கடத்தல்காரனை போலீசார் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர். ஒரு நொடி பிசகியிருந்தாலும் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கக்கூடிய சூழலில், போலீசாரின் ‘சூப்பர் பாஸ்ட்’ ஆக்ஷன் ஹரித்வாரையே நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.
