பெங்களூரு ராம்மூர்த்தி நகரில் மென்பொருள் பொறியாளர் ஷர்மிளா மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், தற்போது வெளியாகியுள்ள உண்மைகள் ஒட்டுமொத்த நகரையே அதிரவைத்துள்ளன. 18 வயது இளைஞன் ஒருவன், காம வெறியில் ஷர்மிளாவின் வீட்டிற்குள் புகுந்து இந்த கொடூரத்தைச் செய்திருப்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஷர்மிளாவை நீண்ட நாட்களாக நோட்டமிட்டு வந்த அந்த வாலிபர், அவர் தனியாக இருந்த சமயம் பார்த்து வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். ஷர்மிளா தன்னை விடுவிக்கும்படி கெஞ்சியும், அந்த இளைஞன் இரக்கமின்றி அவரைத் தாக்கி, கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளான்.
கொலை செய்த பிறகும் அந்த இளைஞனின் வக்கிர புத்தி அடங்கவில்லை. ஷர்மிளாவின் உடலை அசிங்கப்படுத்த முயன்றதுடன், தடயங்களை மறைக்க ரத்தக் கறைகளை அவரோட துணிகளைக் கொண்டே துடைத்து சுத்தம் செய்துள்ளான். யாருக்கும் சந்தேகம் வராதபடி சடலத்திற்கு வேறு உடைகளை மாட்டிவிட்டு, எரியூட்டவும் முயற்சி செய்துள்ளான். இறுதியில் அவரது செல்போனை எடுத்துக் கொண்டு தப்பியோடிய அந்த நபர், போலீசாரின் தீவிர விசாரணையில் சிக்கி அனைத்து உண்மைகளையும் ஒப்புக்கொண்டுள்ளான். ஒரு இளம் பெண்ணின் கனவுகள் இப்படி ஒரு காம மிருகத்தால் சிதைக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
