பொதுவாக ரயில் பயணம் என்றாலே ஜன்னல் ஓரத்து இயற்கை காட்சிகளும், இனிமையான நினைவுகளுமே பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, ரயில் பயணிகளிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஓடும் ரயிலின் கழிவறை காட்டப்படுகிறது. அங்குள்ள ‘இந்தியன் ஸ்டைல்’ கழிவறைத் துளை வழியாகத் திடீரெனத் தீப்பொறிகள் கொழுந்துவிட்டு வெளியேறுகின்றன. ரயில் தண்டவாளத்தில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், கீழிருந்து உராய்வு காரணமாகவோ அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவோ இந்தத் தீப்பொறிகள் மேலெழுந்து வருகின்றன.
चलती ट्रेन के बाथरूम से ब्रेक लगाने पर निकल रही चिंगारी…..
सोचो इस समय इस पर कोई बैठा होता तो क्या….😂 pic.twitter.com/YA4z0OP4Bc
— Pushpraj sharma (@ThePushprajX) May 14, 2026
இந்த வீடியோ ‘எக்ஸ்’ (X) தளத்தில் @ThePushprajX என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. “ஓடும் ரயிலில் பிரேக் போடும்போது கழிவறையில் தீப்பொறி பறக்கிறது. ஒருவேளை அந்த நேரத்தில் யாராவது அங்கு அமர்ந்திருந்தால் நிலைமை என்ன ஆகியிருக்கும்?” என்ற கேள்வியுடன் இந்தப் பதிவு பகிரப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 1.8 லட்சம் பேர் இந்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த வீடியோ எந்த ஊரில் எடுக்கப்பட்டது, எந்த ரயிலில் நடந்தது அல்லது எந்த நாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், ரயில்வே பாதுகாப்புக் குறித்துப் பெரிய கேள்வியை இந்த வீடியோ எழுப்பியுள்ளது. ரயிலின் சக்கரங்களில் ஏற்படும் உராய்வு காரணமாக இவ்வாறு நெருப்புப் பொறிகள் கழிவறை வழியாக உள்ளே வர வாய்ப்புள்ளதாகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
