உத்தரகண்ட்: உதம் சிங் நகரின் டெராய் மேற்கு வனப் பகுதிகளில், புலி ஒன்று மானை வேட்டையாடும் காட்சி சமீபத்தில் காணப்பட்டு, சுற்றுலா பயணிகளால் வீடியோ எடுக்கப்பட்டது. தற்போது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
இக்காட்சி, சுற்றுலா பயணிகளுக்கு அரிய அனுபவமாக அமைந்துள்ளதோடு, புலிகள் மற்றும் மற்ற காட்டு விலங்குகள் இயற்கையாக வேட்டை புரியும் நேரடி காட்சியைப் பார்க்கும் வாய்ப்பாக இருந்தது. பொதுவாக உயிரியல் பூங்காக்களில் புலிகள் போன்ற விலங்குகள் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருப்பதால், இவ்வாறான இயற்கை வேட்டைக் காட்சிகள் மிகவும் அரிதானவை.
ये वीडियो उधम सिंह नगर के तराई पश्चिम वन प्रभाग का है जहां टाइगर ने किया हिरण का शिकार कर लिया pic.twitter.com/xHj3rcNtJm
— Journalist Rupesh Walia (@WaliaRupesh) September 1, 2025
வீடியோவில், காட்டில் காணப்படும் மான்கள் அமைதியாக இயக்கமின்றி நின்று கொண்டிருந்த வேளையில், திடீரென ஒரு புலி பக்கவாட்டில் இருந்து மான் கூட்டத்திற்குள் பாய்ந்து ஓடுகிறது. மான்கள் தத்தளித்து ஓட முயற்சி செய்தபோதிலும், அவற்றில் ஒன்றை புலி வேட்டையாடி பிடிக்கிறது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
