ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் அருகே தங்கை மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்காக 8 தாய்மாமன்கள் இணைந்து லாரி நிறைய சீர்வரிசை எடுத்து வந்தனர்
நெருஞ்சிப்பேட்டையில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். செந்தில்குமார் சித்ரா தம்பதியினரின் மகள் கோபிகா ஸ்ரீக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.
இதற்காக தாய் மாமன்கள் 8 பேர் இணைந்து செண்டை மேளம் முழங்க லாரி நிறைய சீர்வரிசைகள் எடுத்து வந்தனர். மேலும் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் ஆட்டுக்கிடாய்களை ஊர்வலமாக கொண்டு வந்தனர். ஆட்டம் பாட்டத்துடன் தாய் மாமன்கள் கொண்டு வந்து சீர்வரிசைகளை ஊர்மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
