ஒரு சிறு நாய்க்குட்டி தண்ணீர் நிறைந்த குழியில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தது. அதன் அம்மா நாய் அருகில் நின்று கொண்டு, குரைத்து அதை வெளியே வரச் சொல்லி எச்சரித்தது. ஆனால் குட்டி அதை காதில் போட்டுக் கொள்ளாமல் தொடர்ந்து ஆடியது. உடனே அம்மா நாய் மென்மையாக தன் வாயால் குட்டியின் வாலைப் பிடித்து, தண்ணீரிலிருந்து மேலே இழுத்து பத்திரமான இடத்துக்கு கொண்டு சென்றது. இந்த அன்பான செயல் வீடியோவில் பதிவாகி இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டது.
இந்த வீடியோ மூன்றரை லட்சத்துக்கும் மேல் பார்க்கப்பட்டு வைரலானது. பார்ப்பவர்கள் தாயின் அன்பு மனிதர்களாகட்டும் விலங்குகளாகட்டும் ஒன்றே என்று கூறுகின்றனர். ஒருவர் “தாய் எப்போதும் தாய்தான், குழந்தைகளை காக்கும் அவள் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது” என்று கருத்து தெரிவித்தார். இது தாய்மையின் தூய்மையான அன்புக்கு அழகான உதாரணம் என்று அனைவரும் பாராட்டுகின்றனர்.
