பீகார் மாநிலத்தில் தாய்மார்களின் தாய்ப்பாலில் அணுகுண்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் யுரேனியம் கூறுகள் இருப்பதாக வெளியான மருத்துவ தகவல் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

போஜ்பூர், சமஸ்திபூர், ககாரியா, நாலந்தா உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த தாய்மார்களிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் யுரேனியம் இருப்பது ஆய்வில் உறுதியானது.

மாநிலத்தின் பல பகுதிகளில் நிலத்தடிநீர் மாசுபட்டிருப்பதும், சுற்றுச்சூழல் மாசு அதிகரித்திருப்பதும் இவ்வாறு தாய்ப்பாலில் யுரேனியம் கலப்பதற்கான முக்கிய காரணங்களாக மருத்துவ நிபுணர்கள் விளக்குகின்றனர்.

இத்தகைய மாசுபாடு தொடர்ந்து நீடித்தால், சுமார் 70% குழந்தைகளுக்கு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் ஆய்வில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாநில மக்களிடம் கவலை ஏற்படுத்தியுள்ள இந்த தகவல் தொடர்பாக சுகாதார துறையின் விரைவான நடவடிக்கை அவசியமாகப்படுகிறது.