தமிழக முதல்வரின் முதன்மை உடன்பிறப்பாக இருக்க வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் விரும்புவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். அதோடு, 2021 சட்டமன்றத் தேர்தலின் போது அவர் என்னவெல்லாம் பேசினார். அரசியல் களம் சுயநலமாக மாறிக்கொண்டிருக்கிறது என்று சாடினார். முன்னதாக, CM ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, அவரது புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்த கமல், அவரை புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது.

மேலும் பேசிய பாஜக அண்ணாமலை, தமிழக விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை டெல்லி சென்று சந்தித்தது அவருடைய தாத்தாவின் பழைய காலத்து டெக்னிக். மோடிக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி கிடையாது. பிரதமர் மோடி யார் அனுமதி கேட்டாலும் கொடுப்பார்