ராகுல் காந்தி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தியுள்ளார். பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ”ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்ளுமாறு நான் ஏற்கெனவே கூறி இருக்கிறேன், ஆனால் அதனை அவர் ஏற்கவில்லை.

இன்னும் காலம் கடக்கவில்லை தாடியை ஷேவ் செய்துவிட்டு திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்கள் திருமண ஊர்வலத்தில் நாங்கள் பங்கேற்க விரும்புகிறோம்” என்று தெரிவித்தார். லாலுவின் இந்த பேச்சால் அங்கு சிரிப்பலை ஏற்பட்டது.