பொது வருங்கால வைப்பு நிதி (PPF), மூத்தக்குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்), சுகன்யா சம்ரித்தி யோஜனா (எஸ்எஸ்ஒய்) போன்ற ஏதேனும் அரசாங்க திட்டங்களில் பணத்தை முதலீடு செய்து இருந்தால் இச்செய்தி உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இத்திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்குரிய விதிமுறைகளை அரசு மாற்றி இருக்கிறது.

தற்போது நீங்கள் இந்த அரசாங்க திட்டங்களில் ஏதேனும் முதலீடு செய்ய திட்டமிட்டு இருந்தால் பான் மற்றும் ஆதார் அட்டை இன்றி நீங்கள் அதை பயன்படுத்த முடியாது. இதுபற்றிய தகவலை நிதியமைச்சகமானது கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. சிறு சேமிப்புத் திட்டங்கள் கேஒய்சியாக பயன்படுத்தப்படும் என இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதோடு முதலீட்டாளர்கள் மேற்கொண்டு முதலீடு செய்வதற்கு ஆதார் பதிவு எண்ணை முதலில் சமர்ப்பிக்கவும். மேலும் வரம்புக்கு மேல் முதலீடு செய்ய பான் கார்டு காட்டப்படவேண்டும். பான் கார்டு இன்றி முதலீடு செய்ய முடியாது. போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டத்தில் கணக்கு துவங்கும்போது உங்களிடம் ஆதார் இல்லை எனில், ஆதாருக்குரிய பதிவு சீட்டை நீங்கள் சமர்ப்பிக்கவும். அதுமட்டுமின்றி “சிறு சேமிப்பு திட்ட” முதலீட்டுடன் முதலீட்டாளரை இணைக்க கணக்கு தொடங்கிய 6 மாதங்களுக்குள் ஆதார் எண்ணை கொடுக்க வேண்டும்.