தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் நிலவும் சிக்கல்களுக்கு மத்தியில், காங்கிரஸ் நடத்தி வரும் போராட்டத்தை பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார். “தமிழக வெற்றிக் கழகத்தினரே அமைதியாக இருக்கும்போது, காங்கிரஸ் மட்டும் எதற்காக வீதியில் இறங்கிப் போராடுகிறது?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஆளுநரின் செயல்பாடுகளில் பாஜகவின் தலையீடு இருப்பதாக காங்கிரஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளையும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஆளுநர் எப்போதுமே சட்டப்படி மெஜாரிட்டி எண்ணிக்கையை மட்டுமே கேட்கிறார் என்றும், போதிய பலம் இல்லாத விரக்தியில் தான் காங்கிரஸ் இது போன்ற போராட்டங்களில் ஈடுபடுவதாகவும் வானதி சீனிவாசன் சாடியுள்ளார். தவெக-வின் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே ஏற்பட்டுள்ள இந்த நேரடி மோதல், தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
