மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தியில் இன்று நடைபெற்ற தவெக 2-வது மாநில மாநாடு, தமிழகம் முழுவதும் இருந்து வந்த தொண்டர்களால் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டை அரசியல் திருப்புமுனை ஏற்படுத்தும் நிகழ்வாக மாற்ற தயாராக இருந்த தவெக தொண்டர்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து கார்கள், பஸ்கள், வேன்களில் திரண்ட நிலையில், மாநாட்டு திடலில் “சீமான் ஒழிக!” என கோஷமிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். சமீபத்தில் சீமான், தவெக மற்றும் அதன் தொண்டர்களை கடுமையாக விமர்சித்ததையடுத்து, அவருக்கு பதிலளிக்கும் வகையில் இந்த கோஷங்கள் எழுந்ததாக கூறப்படுகிறது.

இந்த கோஷங்கள் குறித்து சீமான் எதிர்வினை தெரிவித்த போது, “தவெக தொண்டர்கள் கூறியதை நான் மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொள்கிறேன்” என்றார். மேலும், மாநாட்டுக்காக ஏற்கனவே வந்து கூடியிருந்த பெருந்தொகையான தொண்டர்கள் பற்றி கேட்கப்பட்டபோது, “நாட்ல இவ்ளோ பேரு வேல இல்லாம இருக்காங்க…” என்ற அவரது பதில், சமூக வலைதளங்களில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.