தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் இன்னும் தொண்டர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள்.
நடிகர் விஜயின் இரண்டாவது மாநில மாநாடு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் பலரும் உற்று நோக்கி கவனித்து வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் கூட இல்லாத நிலையில் அடுத்து வரும் 2026 தேர்தலில் கண்டிப்பாக தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று முதல் முயற்சியில் வாகை சூடும் என்று நம்பிக்கை தெரிவித்து வருகிறார்.
தன்னுடைய முதல் மாநில மாநாட்டை வெற்றிகரமாக மிக பிரம்மாண்டமாக விஜய் நடத்தி முடித்த நிலையில் இன்று இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மாநாட்டில் பேசிய விஜய், 1967-ஆம் ஆண்டும் 1977-ஆம் ஆண்டும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் அதிகார மாற்றம் ஏற்பட்டது.
அதேபோல 2026-ல் வரலாறு திரும்பப் போகிறது என்பதற்கு தான் இந்த மாநாடு. நம்முடைய ஒரே கொள்கை எதிரி பாஜக. நம்முடைய ஒரே அரசியல் எதிரி திமுக என்று விஜய் மீண்டும் ஒருமுறை உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
