புதுக்கோட்டையில் மதிமுக கட்சியின் எம்.பி துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, 2026 தேர்தலில் கூட்டணி கட்சிகள் திமுக சின்னத்தில் போட்டியிடாமல் அவரவர்கள் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாக கூட்டணி கட்சி தலைமை முடிவு செய்ய வேண்டும். திமுக கூட்டணியில் போட்டியிடும் பல கட்சிகளின் சின்னத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து வருவதால் கண்டிப்பாக இதனை தலைமை பரிசீலனை செய்வது அவசியம். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு தனிப்பட்ட செல்வாக்கு இருப்பதால் கண்டிப்பாக கணிசமான அளவுக்கு வாக்குகள் பிரியும்.
திமுகவுக்கு எதிரான மாற்று சக்தி நாங்கள்தான் எனக் கூறுவது விஜயின் ஜனநாயக உரிமை. ஆனால் மற்ற கட்சிகளை நாங்கள் பொருட்படுத்தவில்லை. திமுக கூட்டணிக்கு அவரது வருகையால் எந்த பாதிப்பும் ஏற்படாது. 2026 நடைபெறும் தேர்தலில் மதிமுக 10 தொகுதிகளை கேட்டுள்ளதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை அதே நேரத்தில் நாங்கள் கூடுதல் தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளோம் என்றார். மேலும் பாஜக தனித்து நின்றால் அவர்களின் வாக்கு எண்ணிக்கை தெரியும் என்றும் கூறினார்..
