மணிப்பூரில் மெய்தி இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பழங்குடியின பெண்ணை நிர்வாணமாக்கி இழுத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வெளியானதையடுத்து இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வன்கொடுமையைக் கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில், புதுச்சேரியில் இன்று திமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் முடிவில் மேடையில் இருந்து இறங்கி வந்த எதிர்கட்சி தலைவர் சிவா தவறி கீழே விழுந்து தலையில் காயமடைந்துள்ளார். இதனால், அவரை உடனே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.