இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்கள் அனைவரும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை அதிக அளவு மேற்கொள்கின்றனர். குறிப்பாக வங்கிக்கு செல்லும் காலம் போய் தற்போது இருந்த இடத்தில் இருந்து கொண்டே google pay மற்றும் phonepe உள்ளிட்ட யுபிஐ செயலிகள் மூலமாக மக்கள் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தவறாக ஒருவருக்கு நீங்கள் அனுப்பிய பணத்தை எப்படி உங்கள் அக்கவுண்டுக்கு திரும்ப பெறுவது என்பது குறித்து எதிர்பார்க்கலாம். நீங்கள் கூகுள் பே மற்றும் போன் பே என எந்த ஒரு யுபிஐ அப்ளிகேஷனை பயன்படுத்தி பிறருக்கு பணம் அனுப்பி இருந்தாலும் முதலில் யு பி ஐ அப்ளிகேஷன் இன் customer care- க்கு புகார் அளிக்க வேண்டும். மேலும் NPCI போர்ட்டலிலும், RBI இன் CMS- லும் புகார் அளிக்கலாம்.