உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதாவது வீடியோ கால் மூலமாக ஸ்கிரீன் ஷேர் செய்யும் வசதி மற்றும் கூடுதல் எமோஜிகள் உள்ளிட்ட பல வசதிகள் சமீபத்தில் பயனர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களுக்கு இரட்டை பாதுகாப்பை வழங்கி வருகிறது.

இந்த பாதுகாப்பு அம்சத்தை மேலும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் whatsapp நிறுவனம் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு automatic security code verification என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக பணப்பரிமாற்றம் மற்றும் சாட்டிங் ஆகியவற்றை செய்யும் போது தானாகவே அக்கவுண்டை வெரிஃபை செய்து கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் தற்போது பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த வாரங்களில் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.