உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருவதால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி வீடியோ கால் மூலம் ஸ்கிரீன் ஷேர் செய்வது, புதுவிதமான ஸ்டிக்கர்களை உருவாக்குவது மற்றும் தெரியாத நபர்களிடமிருந்து வரும் காலை பூட் செய்வது போன்ற பல அப்டேட்டுகள் சமீபத்தில் வழங்கப்பட்டன. அதேசமயம் பயணங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக ஜிமெயில் மூலம் லாகின் செய்யும் வசதியும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் பயனர்களுக்கு புதிதாக தற்போது ஒரு அப்டேட் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை வாட்ஸ் அப் கார்டில் 15 பேர் மட்டுமே குரூப் கால் மூலம் பேசும்படி வசதி இருந்த நிலையில் இன்னும் கூடுதலாக 32 பேர் வரையிலும் வாட்ஸ் அப் கால் மூலம் பேசும்படியான புது அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் தற்போது வாட்ஸ் அப் டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது